6 வருட ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வர உள்ளது!

Aug 17, 2024 - 22:44
Sep 9, 2024 - 19:10
 6
6 வருட ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வர உள்ளது!

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில், ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 என 3 கட்டங்களாகவும், ஹரியானாவில் அக்டோபர் 1-ந் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும். இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதே நேரத்தில் மகாராஷ்ட்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சாசனத்தின் 370-வது பிரிவின்படி 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் மாநிலம் ஜம்மு - காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்த நிலையில், 10 வருடங்களுக்கு பிறகு ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.