அரசியலில் களம் இறங்கிய ஸ்டாலின் மருமகன்!

அரசியல் களத்திற்கு எண்ட்ரி கொடுத்திருக்கிறார் சபரீசன்

Apr 3, 2026 - 12:30
 4
அரசியலில் களம் இறங்கிய ஸ்டாலின் மருமகன்!

அரசியலில் களம் இறங்கிய ஸ்டாலின் மருமகன்!

தி.மு.-விற்காக பென் என்கிற வியூக வகுப்பு நிறுவனத்தை சபரீசன் நடத்திவருகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக, தி.மு. விற்காக தேர்தல் வேலைகளையும் பின்னிருந்து பார்த்து வரும் முக்கிய நபராகவும் சபரீசன் பார்க்கப்படுகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் மற்றும் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் தி.மு..வின் வெற்றிக்கு இவரது பங்களிப்பு முக்கியமானது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தனது மாமனார் ஸ்டாலினுக்கு ஆலோசகராகவும், வியூக நிபுணராகவும் செயல்பட்டிருக்கிறார்.

ஆனால், இதுவரை  நேரடியாக எந்த அரசியல் கூட்டங்களிலும் அவர் பங்கேற்றதில்லை. இந்நிலையில், நண்பரின் தேர்தல் வெற்றிக்காக முதல் முறையாக நேரடியாக அரசியல் களத்திற்கு எண்ட்ரி கொடுத்திருக்கிறார் சபரீசன்.

தி.மு. நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வரின் மகளும், தனது மனைவியுமான செந்தாமரையுடன் பங்கேற்றார் சபரீசன். இவர்களுடன், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்

இந்த கூட்டத்தில் பேசிய சபரீசன், `வில்லிவாக்கம் தொகுதி நமக்கு சாதகமான தொகுதி. இங்கு வேட்பளாராக நிற்கும் கார்த்திக் எனது நெருங்கிய நண்பர் என்றும். இந்த தொகுதியில் நான் நிற்பதும், கார்த்திக் நிற்பதும் ஒன்று தான்.

.வெ. தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதே, அவரது தன்னம்பிக்கையின்மையை காட்டுவதாக அமைந்துள்ளது. தி.மு. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்என உறுதி அளித்துள்ளார்.

மேலும், திமுக வெற்றிக்கு தவெக ஒரு பொருட்டல்ல என்றும் கூறியுள்ளார்.  

தி.மு. சார்பாக டெல்லி அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கப்போகிறார் சபரீசன் என்கிற பேச்சு தி.மு. தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் தான், தி.மு. வேட்பாளரை ஆதரித்து பிராசர களத்திற்கே சபரீசன் வந்துள்ளதால், விரைவில்  நேரடி அரசியலுக்குள் முழுவீச்சில் இறங்கும் திட்டத்தில் மாப்பிள்ளை சபரீசன் இருக்கிறாரோ? என்கிற பேச்சு தி.மு. வில் எழுந்துள்ளது.