செந்தில் பாலாஜி தோற்பது உறுதி – அண்ணாமலை
செந்தில் பாலாஜி மட்டுமே வெற்றி பெற வேண்டுமென நினைக்கிறார்
செந்தில் பாலாஜி தோற்பது உறுதி – அண்ணாமலை
கோயம்புத்தூரில் செந்தில் பாலாஜியை தோற்கடிக்க போவது கோவை திமுகவினர் என்பதில் மாற்றமில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரை தூக்கி வீசி விட்டனர். சம்பந்தம் இல்லாவதவர்களை சம்பந்தம் இல்லாமல் தூக்கி போட்டிருக்கிறது திமுக.
அதாவது, கோவையில் செந்தில் பாலாஜி மட்டுமே வெற்றி பெற வேண்டுமென நினைக்கிறார்.
ஒரு வேளை திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர் மட்டுமே அமைச்சராக வேண்டும், யாரும் போட்டிக்கு இருக்க கூடாதென நினைத்து கொண்டிருக்கிறார்.
கோயம்புத்தூரில் திமுக நிச்சயம் தோற்கும் அது மக்களால் அல்ல திமுகவினரால் நடக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
