பேனை பேயாக்கும் அரசியல் எதிரிகள்!

அவதூறு சேற்றை வீசுகிறார்கள்

May 6, 2025 - 17:36
 23
பேனை பேயாக்கும் அரசியல் எதிரிகள்!

பேனை பேயாக்கும் அரசியல் எதிரிகள்!

ஈரை பேனாக்கி பேனை பேயாக காட்ட நினைக்கிறார்கள் – முதல்வர் ஸ்டாலின்

திமுகவினருக்கு ஸ்டாலின் திடீர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அதிகார அமைப்புகளை ஏவி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

ஆட்சியை குறை சொல்ல முடியாத காரணத்தால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள்.

சந்தர்ப்பவாத கூட்டணியின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும்.

4 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைக்க கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு.

பொதுக்கூட்டங்கள் நடத்தி திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்திடுக 

பொதுக்கூட்டங்களில் கண்ணியக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.