எஸ்.ஐ-ன் அடாவடித்தனம் ; கள் இறக்கியதால் விபரீதம்!

கள் இறக்கியது விற்பனைக்காக அல்ல

Apr 7, 2026 - 17:24
 17
எஸ்.ஐ-ன் அடாவடித்தனம் ; கள் இறக்கியதால் விபரீதம்!

எஸ்.ஐ-ன் அடாவடித்தனம் ; கள் இறக்கியதால் விபரீதம்! 

பனை மர தொழிலாளியை எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் பனைமரத்தில் கள் இறக்கிக் கொண்டிருந்த மணிகண்டன் என்பவர் மீது எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மணிகண்டன் வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்ததால் கள் சொந்த தேவைக்காக தன்னுடைய சொந்த நிலத்தில் இருந்த பனை மரத்தில் கள் இறக்கியுள்ளார். இந்த செய்தியறிந்த எஸ்.ஐ இசக்கியராஜா கள் இறக்குவது தடை செய்யப்பட்டுள்ளதால் விசாரணை என்ற பெயரில் தகாத முறையில் பேசியுள்ளார்.

இதனையடுத்து, ஆத்திரமடைந்த மணிகண்டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

தன்னிடம் அதிகார வரம்பு மீறி நடந்து கொண்ட எஸ்.ஐ இசக்கிராஜாவை மணிகண்டன் தாக்கியுள்ளார்.

இதன் பின்னர், பதிலுக்கு இசக்கிராஜா அவரை தன்னிடம் இருந்த துப்பாக்கியால் எந்த ஒரு அதிகார அனுமதியின்றி மணிகண்டனின் இரு காலிலும் சுட்டுள்ளார்.  

இந்த வாதங்களுக்கு முன்னரே, கள் இறக்கியது விற்பனைக்காக அல்ல, தாங்கள் குடிப்பதற்காக என்று தெரிவித்துள்ளார் மணிகண்டன்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு அப்பகுதி மக்களிடையே இசக்கிராஜா தன்னுடைய அதிகார வரம்பை மீறிவிட்டதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மேலும், காயமடைந்த எஸ்.ஐ இசக்கிராஜா, மணிகண்டன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.