எழுந்து நடக்கவே 1 வருஷம் ஆகிடும்....இன்னும் என்னென்ன சிக்கல் இருக்கு தெரியுமா?

எழுந்து நடக்கவே 1 வருஷம் ஆகிடும்....
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனர்.
அவர்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படும் எனவும் அவர்களது உடல்நிலை சீராக சுமார் 1 ஆண்டு ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வீரர்கள் ஐஎஸ்எஸ் நிலையம் வந்த பிறகு அவர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு பழைய வீரர்கள் பூமிக்கு திரும்புவது வழக்கம்.
இதற்கு 5 நாட்கள் ஆகும் ஆனால், இந்த முறை பழைய வீரர்கள் 2 நாட்களிலேயே நேற்று பூமிக்கு புறப்பட்டனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 17 மணி நேர பயணத்துக்கு பிறகு இன்று அதிகாலை 3.27 மணி அளவில் அமெரிக்காவில் ஃபுளோரிடா கடல் பகுதியில் டிராகன் விண்கலம் வந்து சேர்ந்தது.
விண்வெளியில் தங்கியிருந்ததால் அவர்களின் எலும்புகள், தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும் அவர்களால் எழுந்து நடக்க முடியாது.
அவர்களின் தோல், குழந்தைகளின் தோல் போன்று மிகவும் மென்மையாக மாறியிருக்கும் கண்பார்வை திறன் பாதிக்கப்பட்டு இருக்கும்.
கதிரியக்க பாதிப்பு காரணமாக செல்கள், ரத்த அணுக்களும் பாதிக்கப்பட்டிருக்கும். பூமிக்கு திரும்பியதும் அவர்களுக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும்.
சுமார் 3 மாதங்கள் முதல் ஓராண்டுக்கு பிறகே சுனிதா உள்ளிட்டோர் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்.
இன்று காலை பூமிக்கு திரும்பிய 4 பேரும் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் இங்கு 6 வாரங்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர், தரையில் கால் ஊன்றி நடப்பதற்கும் ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் வழங்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு வீடுகளுக்குச் செல்வார்கள் என நாசா அறிவித்துள்ளது.