மதுக்கடையில் பணம் கேட்டதால் மொத்த ஊருக்கும் மின்தடை! Kerala EB
கேரளா, திருவனந்தபுரத்தில் மதுக்கடையில் பணம் கேட்டதால் மின்வாரிய ஊழியர்கள் மொத்த ஊருக்கும் மின்தடை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுக்கடையில் பணம் கேட்டதால் மொத்த ஊருக்கும் மின்தடை! Kerala EB
கேரளா, திருவனந்தபுரத்தில் மதுக்கடையில் பணம் கேட்டதால் மின்வாரிய ஊழியர்கள் மொத்த ஊருக்கும் மின்தடை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது போதையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
கேரளாவில் உள்ள மதுக்கடை ஒன்றில் மூன்று மின்வாரிய ஊழியர்கள் மது குடித்துவிட்டு பணம் தர மறுத்துள்ளனர். இதனால் அங்கு பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதமாக மாறி உள்ளது. இதற்கு பழிவாங்கும் விதமாக அந்த மூன்று மின்வாரிய ஊழியர்களும் சேர்ந்து அந்த பகுதி முழுவதும் மின்தடையை ஏற்படுத்தியுள்ளனர். பின் இதனைப் பற்றி விசாரித்த போது தான் அந்த மின்வாரிய ஊழியர்கள் மது போதையில் இருப்பதும், காரணம் இல்லாமல் மின்தடை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. பின் இந்த சம்பவம் குறித்து மின்சார வாரிய தலைமை அலுவலக அதிகாரிகளுக்கு தெரிய வந்து, அந்த மதுக்கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அந்த 3 மின்வாரிய ஊழியர்கள் தான் மின்தடையை ஏற்படுத்தினார்கள் என உறுதி செய்யப்பட்டது.
மின்வாரிய ஊழியர்கள் சஸ்பெண்ட்!
இதனையடுத்து தலைமை விஜிலென்ஸ் அதிகாரியின் உத்தரவின் பேரில், அந்த 3 மின்வாரிய ஊழியர்ககளையும் நிர்வாக இயக்குநர் பிரபாகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக கேரள மாநில மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.