மம்தா சொல்வது தவறு – நிர்மலா சீதாராமன்

Jul 27, 2024 - 23:16
Sep 9, 2024 - 22:24
 13
மம்தா சொல்வது தவறு – நிர்மலா சீதாராமன்

நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியினுடைய மைக் அணைக்கப்பட்டதாக கூறியது உண்மை அல்ல என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மம்தா மேனர்ஜியின் உரையை நாங்கள் கேட்டோம். ஒவ்வொரு முதல்வருக்கும் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அது திரையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் மைக் அணைக்கப்பட்டதாக மம்தா பேனர்ஜி கூறுவது முற்றிலும் தவறு என கூறினார்.

மேலும், ஒவ்வொரு முதல்வருக்கும் நேரம் ஒதுக்கப்பட்ட போது எப்படி அவருக்கு மட்டும் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் துர்தஷ்டவசமானது எனவும், மீண்டும் பொய்யை அடிப்படையாக கொண்ட கதையை உருவாக்குவதை விட அவர் உண்மை பேச வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார்.