கரூர் உயிரிழப்புக்கு பின்னால் சதிச்செயல் இருக்கிறது – தவெக வழக்கறிஞர் மனு
சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்

கரூர் உயிரிழப்புக்கு பின்னால் சதிச்செயல் இருக்கிறது – தவெக வழக்கறிஞர் மனு
நாமக்கல் பரப்புரைக்கு வரும் போது விஜய் வேண்டுமென்ற காலதாமதம் செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல முறை எச்சரித்தும், அறிவுரைகள் வழங்கியும் தவெக நிர்வாகிகள் அதை பின்பற்றவில்லை என எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர்.
விஜய் பிரசார இடத்திற்கு கால தாமதமாக வந்ததால் எதிர்பார்ப்பு அதிகரித்து மக்கள் கூட்டம் அதிகரித்து விட்டதாகவும், அசாதாரண சூழல் ஏற்படும் என புஸ்ஸி ஆனந்தை எச்சரித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் அறிவுரைகளுக்கு தவெகவினர் எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தவெக இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற கிளையில் நாளை மனுதாக்கல் செய்ய உள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை பத்திரப்படுத்த வேண்டும் எனவும், முறையான ஆவணங்களோடு நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாகவும் தவெகவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பின்னால் இருக்கும் சதிச்செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும்,
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளதாகவும் வழக்கறிஞர் அன்பழகன் கூறியுள்ளார்.