மேற்கு வங்க தேர்தல்!
மேற்கு வங்க தேர்தல்; 9 மணி நிலவரம் – 18.39 % வாக்குகள் பதிவு
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 294 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டுள்ளது மேற்கு வங்க மாநிலம். இதில் முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இன்று (ஏப்ரல் 29) 142 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. கடந்த கால வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் வாக்குப்பதிவில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் அலுவலர்கள் பாரதிய ஜனதா கட்சியின் அறிவுறுத்தலின்படி செயல்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களைத் தேர்தல் அலுவலர்கள் முறையாகப் பணியாற்ற விடுவதில்லை என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 23-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 91.78 சதவீதம் என்ற சாதனை அளவிலான வாக்குப்பதிவானது குறிப்பிடத்தக்கது.
