பாதிப்படைந்த ஏற்றுமதி… முறியடிக்குமா மத்திய அரசு?
வரி விதிப்பு நியாயமற்றவை, காரணம் இல்லாதவை

பாதிப்படைந்த ஏற்றுமதி… முறியடிக்குமா மத்திய அரசு?
ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறவிருந்த அமெரிக்காவுடனான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் ஏற்றுமதிகள் மீதான 25% வரி விதிப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்ம் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகிவற்றை வாங்குவதற்காக இந்தியா மீது மேலும் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவின் மிக அதிக வரிவிதிக்கப்பட்ட வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாக இந்தியா மாறிவிடும்.
உள்நாட்டு அரசியல் குறிக்கோள்கையும் புவிசார் மூலோபாய இலக்குகளையும் அடைய நாடுகள் வர்த்தகக் கொள்கையைப் பயன்படுத்துவது ஒன்றும் புதியதல்ல. ஆனால், நாடுகளுக்கிடையில் வணிக மட்டத்தில் நிகழும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பதற்கான உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடுகளை 2019 டிசம்பர் முதல்வர் அமெரிக்க அரசாங்கம் முடக்கியுள்ளது.
இதனால் பலம் பொருந்திய நாடுகள் எந்தப் பொறுப்புமின்றி தங்கள் விருப்பங்களைத் திணிக்க முடிகிறது.
உலக வர்த்தகத்தில் அதிரடி ஆதிக்கப் போக்கைத் தடுக்கவுமே இந்தியா போன்ற நாடுகள் பலதரப்பு வர்த்தக அமைப்பை ஆதரிக்கின்றன.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்புகளை நியாயமற்றவை, காரணம் இல்லாதவை என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதில், குறிப்பாக அமெரிக்காவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்து வரும் திருப்பூர் பின்னலாடை ஜவுளி தொழில் துறையினர் அச்சத்தில் உள்ளனர்.
நமது தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் நிவாரணங்கள் வழங்குவதோடு, பாதுகாக்க கட்டமைப்பு சீர்திருத்தங்களையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.