எது வதந்தி முதல்வர் ஸ்டாலின்…. நீங்கள் பேசுவது தான் வதந்தி, நடக்காத எதையும் மக்கள் பரப்பவில்லை! - ஈபிஎஸ்

முதலமைச்சரின் வீடியோ தான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது

Sep 30, 2025 - 17:43
 6
எது வதந்தி முதல்வர் ஸ்டாலின்…. நீங்கள் பேசுவது தான் வதந்தி, நடக்காத எதையும் மக்கள் பரப்பவில்லை! - ஈபிஎஸ்

எது வதந்தி முதல்வர் ஸ்டாலின்…. நீங்கள் பேசுவது தான் வதந்தி, நடக்காத எதையும் மக்கள் பரப்பவில்லை! - ஈபிஎஸ்

 

கரூர் உயிரிழப்பு சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

திமுகவை சார்ந்தவர்கள் தமிழ்நாடு மாணவரணி என்ற பெயரில் போஸ்டர்களை ஒட்டுகிறார்களே அது அவதூறா?

குறைவான காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்புக்கு இருந்த நிலையில் 500 போலீசார் இருந்தார்கள் என கூறுவது வதந்தியா?

தடியடி நடத்தியது வதந்தியா, அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டார் இவ்வளவு சாட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவிய பிறகு வதந்தி என கூறுவது தான் வதந்தியாக இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்காரு.

உயிரிழப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு பரப்புவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆனால், என்ன அவதூறு, எது அவதூறு என சொல்ல வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்கட்சிகள் யாரும் இதுவரை அரசியல் செய்யவில்லை, முதலமைச்சரின் வீடியோ தான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என கூறியிருக்கிறார்.

கள்ளக்குறிச்சியில் உங்கள் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள் இப்போது மட்டும் கலங்குகிறதா? சென்னை ஏர் ஷோவை நீங்கள் குடும்பத்தோடு அமர்ந்து கண்டுகளித்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே அப்போது மட்டும் வீட்டிலே இருந்தீர்களே எப்படி?

தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களே உங்களுடைய ஒரு தலை பட்சமான அரசியலை காட்டுகிறது.

திமுகவை சார்ந்தவர்கள் தான் விஜய்க்கு எதிராக தமிழக மாணவரணி என்ற பெயரில் போஸ்டர்களை ஒட்டுகின்றனர்.

தனி நபர் விசாரணை ஆணையத்தின் கேள்விகள், விசாரணைகள் அனைத்தும் ஒருதலை பட்சமாகவே உள்ளதாக மக்களுக்கு சந்தேகம் வருவதாக தெரிவித்துள்ளார்.