மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்! Ajithkumar
மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்! Ajithkumar
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அஜித் குமாருக்கு ஏற்பட்ட பயங்கர விபத்து!
நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடித்து வந்தாலும் அவருக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸில் தான் ஆர்வம் அதிகம். அதனால் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் இதில் தான் அதிகமாக ஆர்வம் காட்டி வந்தார். அதுமட்டுமின்றி இதற்கு முன்பு இவர் கார் ரேஸிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால் அஜித்துக்கு கார் ரேஸின் போது ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கார் ரேஸில் இருந்து அவர் விலகி இருந்தார்.
கார் ரேஸில் மீண்டும் களம் இறங்கிய அஜித்!
இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் ரேஸில் களம் இறங்கியுள்ளார். அதாவது 2025ல் ஐரோப்பாவில் நடக்கும் GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்காக சில அணிகள் உடனும் அஜித் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் அஜீத் குமார் மீண்டும் கார் ரேஸ் களத்திற்கு வர உள்ளதை முன்னாள் பார்முலா 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உறுதி செய்துள்ளார்.