சித்தராமையா வழக்கு தள்ளுபடி!
மைசூரு மாநகர வளர்ச்சி குழும நில முறைகேடு புகாரில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது வழக்கு நடத்த அனுமதி வழங்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யகோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கர்நாடகா மாநிலம் மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம் (மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையா தனது மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கி ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில் தன்மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரிய முதல்வர் சித்தராமையா தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.
இந்த தீர்ப்பில், “தனிநபர் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. எனவே மூடா விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அளித்த ஒப்புதலை ரத்து செய்ய கோரிய சித்தராமையா மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.