களத்தில் இறங்கிய பாஜக; 8 பேர் குழுவை அமைத்த ஜே.பி.நட்டா!

41 பேர் பலி - அறிக்கை அளிக்க வேண்டும்

Sep 29, 2025 - 17:47
 52
களத்தில் இறங்கிய பாஜக; 8 பேர் குழுவை அமைத்த ஜே.பி.நட்டா!

களத்தில் இறங்கிய பாஜக; 8 பேர் குழுவை அமைத்த ஜே.பி.நட்டா!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள பாஜக சார்பில் ஹேமா மாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா.

இந்த 8 பேர் கொண்ட குழு சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விரைவில் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதில், எம்.பிக்கள் ஹேமா மாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, ரேகா ஷர்மா உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய பாஜக அமைத்துள்ள இந்த குழுவில் சிவசேனா, தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக சார்பில் அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த குழு கரூர் நெரிசலுக்கான காரணத்தை ஆராய்வதோடு, பாதிகப்பட்டவர்களையும் சந்திக்கும் என ஜே.பி நட்டா கூறியுள்ளார்.