அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்த விரும்புகிறோம்; இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு!
கச்சா எண்ணெய்

அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்த விரும்புகிறோம்; இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு!
ரஷ்யாவுக்கு பதிலாக தங்களிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய வேண்டுமென அமெரிக்க எரிசக்தி துறை செயலர் கிறிஸ் ரைட் அழைப்பு விடுத்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் கிடைப்பதால் அதை இந்தியா கொள்முதல் செய்வதாக கூறினார்.
இந்தியா செலவழிக்கும் இந்த நிதியானது, வாரந்தோறும் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவிப்பதற்கு பயன்படுவதாக உக்ரைன், ரஷ்யா போரை மேற்கோள்காட்டி கிறிஸ் ரைட் கவலை தெரிவித்தார்.
அமெரிக்காவிடமும் எண்ணெய் வளம் இருப்பதாக கூறிய அவர், ரஷ்யாவுக்கு பதிலாக தங்களிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியா முன்வர வேண்டுமென நேரடியாக அழைப்பு விடுத்தார்.
மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியாவை தண்டிக்க விரும்பவில்லை என்றும், அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்தவே தாங்கள் விரும்புவதாகவும் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.