ஜார்கண்டில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து! Train Accident | Jharkhand Train Accident

Jul 30, 2024 - 17:44
 23
ஜார்கண்டில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து! Train Accident | Jharkhand Train Accident

ஜார்கண்டில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து! Train Accident | Jharkhand 

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மும்பை நோக்கி சென்ற ஹவுரா - மும்பை விரைவு   ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ஜார்க்கண்ட்டின் ராஜ்கர்சவான் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்ட நிலையில் , அந்த வழியே  சென்ற ஹவுரா -மும்பை விரைவு ரயில் அதன் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இதில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளதாகவும், சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.