தீபாவளி பரிசாக குறையும் விலை….. சீதாராமன் சொன்ன GOOD NEWS

குறையும் ஜி.எஸ்.டி வரி

Sep 3, 2025 - 18:29
 40
தீபாவளி பரிசாக குறையும் விலை….. சீதாராமன் சொன்ன GOOD NEWS

குறையும் ஜி.எஸ்.டி வரி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது.  

டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் வைத்து நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

5, 12, 16, 26 சதவீதமாக உள்ள வரிவிதிப்பு அடுக்கை 5 மற்றும் 18 என்ற அடுக்கில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்பெறும் விதமாக ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு தீபாவளி பரிசாக அறிவிக்கப்படும் என ஏற்கனவே மோடி அறிவித்திருந்தார்.  

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரியை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

ஆடம்பர பொருட்களுக்கான ஜி.எஸ்.டி விலை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.  

புகையிலை மற்றும் சொகுசு கார்கள் தொடர்பான பொருட்கள் மீது 40% வரி விதிக்கவும் ஆலோசனை.

ஜி.எஸ்.டி வரியால் ஏற்கனவே மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஜி.எஸ்.டி விலை மாற்றம் நிதிச்சுமையை குறைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.