ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

Jun 7, 2024 - 23:35
Sep 9, 2024 - 23:56
 10
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

மும்பையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே உள்ளது போலவே இந்த விகிதமானது 6.5 சதவீதமாகவே நீடிக்கும். பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க ஏதுவான முறையில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

2024 – 25ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக நீடிக்கும். அது முதல் மற்றும் 3ம் காலாண்டில் 7.3 % ஆகவும், இரண்டு மற்றும் 4ம் காலாண்டில் 7.2% ஆகவும் இருக்கும் என கூறினார்.