சசிகலா தொடர் உண்ணாவிரதம்!

Jun 7, 2024 - 23:41
Sep 9, 2024 - 23:55
 13
சசிகலா தொடர் உண்ணாவிரதம்!

சிதறிக் கிடக்கும் .தி.மு..,வினரை ஒன்றுபடுத்த, தொடர் உண்ணாவிரதம் இருக்க, சசிகலா திட்டமிட்டுள்ளதாக, அவரது ஆதரவு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதுகுறித்து சசிகலா ஆதரவாளர்கள் கூறும் போது,  .தி.மு..,வை பாதுகாக்க, சசிகலா தலைமையில் இணைய வேண்டும். அதற்காக, ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் அல்லது நீண்ட உண்ணாவிரதம் இருக்க, சசிகலா திட்டமிட்டுள்ளார். ஒற்றுமையை விரும்பும் தொண்டர்கள், அவருக்கு ஆதரவு தருவர். அதற்கான முயற்சியை சசிகலா எடுக்க உள்ளார்.
இனியும் அமைதியாக இருக்கக் கூடாது என சசிகலாவிடம் தெரிவித்துள்ளோம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவிற்கு வரும்படி, சசிகலாவிற்கு அழைப்பு வந்துள்ளது. அதன் பின், நல்ல முடிவை அறிவிப்பதாக சசிகலா, எங்களிடம் உறுதி அளித்துள்ளார் என கூறியுள்ளனர்.