கள் இறக்க விவசாயிகள் கோரிக்கை!

Jun 29, 2024 - 01:43
Sep 9, 2024 - 22:48
 11
கள் இறக்க விவசாயிகள் கோரிக்கை!
கள் இறக்க விவசாயிகள் கோரிக்கை!

தமிழகத்தில் இனி கள்ளச்சாராயம் சாவு நிகழாமல் இருப்பதற்கு கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.   

இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை எடுத்துப் பேசினர்.

இதில் கலந்து கொண்ட விவசாயிகள் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் சாப்பிட்டு 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் உயிரிழந்தவர்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் இனி கள்ளச்சாராயம் சாவு நிகழாமல் இருப்பதற்கு தமிழக அரசு உடனடியாக கள்  இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும்

இதற்கு மாவட்ட ஆட்சியர் தமிழக அரசிடம் விவசாயிகளின் கோரிக்கையை எடுத்துக் கூற வேண்டும்

உடனடியாக இதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து கள்  இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பேசியுள்ளனர்.