கருத்துக் கணிப்புகளால் இழப்பு தான் – பிரதீப் குப்தா
தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்துவதால் எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை; இதனால் எங்களுக்கு பொருளாதார இழப்பே ஏற்படுகிறது' என 'ஆக்சிஸ் மை இண்டியா' தலைவர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி, 400 இடங்களை வெல்லும் என, 'ஆக்சிஸ் மை இண்டியா' கருத்துக்கணிப்பு வெளியிட்டது. ஆனால், பா.ஜ.,வால் 294 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான போது, 'ஆக்சிஸ் மை இண்டியா' தலைவர் பிரதீப் குப்தா கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், இது குறித்து கூறிய பிரதீப் குப்தா தேர்தலுக்கு பி,ந்தைய கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என கூறுவது குழந்தை தனமானது. பங்குசந்தைக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் மீது உள்ள களங்கத்தை துடைப்போம்.
வெளியிட்ட 65 கருத்துக்கணிப்புகளில் 61 தேர்தல்களுக்கு சரியாக கணித்திருக்கிறோம். தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்துவதால் எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை; இதற்கான செலவுகளை ஊடகங்கள் முழுமையாக வழங்குவதும் கிடையாது; நாடு முழுவதும் கருத்துக் கணிப்புகளை நடத்த பெருந்தொகையை செலவிடுகிறோம்; இதனால் எங்களுக்கு பொருளாதார இழப்பு மட்டுமே மிஞ்சுகிறது என கூறினார்.