அதிகரித்த மீன்வரத்து…மீன் விற்பனை அமோகம்!

அதிகரித்த மீன்வரத்து…மீன் விற்பனை அமோகம்!

Dec 3, 2024 - 12:37
Dec 3, 2024 - 12:58
 4
அதிகரித்த மீன்வரத்து…மீன் விற்பனை அமோகம்!

அதிகரித்த மீன்வரத்து…மீன் விற்பனை அமோகம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

பெஞ்சல் புயலின் எச்சரிக்கை காரணமாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் நேற்றைய தினம் மேல்மருவத்துறையின் அனுமதியோடு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

 அவ்வாறு சென்ற மீனவர்களின் வலையில் தாங்கள் எதிர்பார்த்த அளவை விட அளவுக்கு அதிகமாக மீன்கள் சிக்கியதால் அவர்கள் அனைவரும் கறைக்கு சீக்கிரம் திரும்பினர்.

 புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்காத நிலையில் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடல் மீன்கள் வரத்து இல்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று காலை முதல் கடலில் உள்ள மீன்கள் கிடைக்கும் என்பதால் அதனை ஆர்வமுடன் வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை தந்தனர்.

 கடலில் பிடித்துக் கொண்டு வரப்பட்ட வாவல், வஞ்சரம், இறால், திருக்கை உள்ளிட்ட மீன்கள் நண்டு போன்றவைகள் சுமார் 800 முதல் 3000 வரையில் ஏலம் போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.