அண்ணாமலை அளித்த புகார் மனு!

Jun 25, 2024 - 01:38
Sep 9, 2024 - 23:03
 9
அண்ணாமலை அளித்த புகார் மனு!

தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பா.., மூத்த நிர்வாகிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறிய தி.மு.., அரசை கண்டித்து, பா..,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 24) சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பா.., மூத்த நிர்வாகிகளுடன் கவர்னரை சந்தித்து பேசியுள்ளார் தமிழக பா.., தலைவர் அண்ணாமலை.  

அப்போது கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி..,க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாலை வலியுறுத்தி உள்ளார். திமுக அரசு கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது குறித்த புகார் மனுவை கவர்னர் ரவியிடம் அண்ணாமலை அளித்துள்ளார்.