நிலுவையில் உள்ள 4,47,87,945 வழக்குகளுக்கு எப்போது தீர்வு?
மாவட்ட, தாலுக்கா நீதிமன்றங்களில் இதுவரை 4,47,87,945 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதற்கு எப்போது தீர்ப்பு கிடைக்கும் என தற்போது கேள்வி எழுந்துள்ளது.
இதில் எத்தனை சிவில் கிரிமினல் மற்றும் பல்வேறு வகையான கம்பெனி ஊழல் சுற்றுச்சூழல் அதிகார மட்டத்தில் நிகழ்ந்த லஞ்ச லாவண்யங்கள் மாநிலங்களுக்கு இடையான தாவாக்கள் பல்வேறு மக்களுக்குமான அண்டை அக்கம்பக்க நியாயங்கள் பெண்கள் மீதான வன்முறை என ஏராளமான வழக்குகள் தீர்வு காணப்படாமலே இருக்கின்றன என்பதைத்தான் இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.
அந்த வகையில் இந்தியாவில் நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் வழக்குகள் இரண்டை இங்கு குறிப்பிடலாம்.
இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு என்று சொன்னால் அது தோசிபுரா நில வழக்கு. இந்த வழக்கு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் அதாவது 1878 ல் வாரணாசி நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டது.
வாரணாசி அருகே உள்ள தோசிபுராவில் ஒரு இரண்டு ஏக்கர் நிலம் சன்னி ஷியா முஸ்லிம் மக்களுக்கிடையே
அது தங்களுக்கு சொந்தம் என்கிற முறையில் இரு சாராரும் தொடர்ந்த வழக்கு என்பதாய் இருந்தது.. அது பனாரஸ் மகாராஜா தானமாக வழங்கிய நிலம் என்று சொல்லப்பட்ட போதும் அதை சன்னிப் பிரிவு மக்கள் ஏற்கவில்லை.
நெடுங்காலம் இழுபறியாக இருந்த இந்த வழக்கு1976 இல் மீண்டும் வாரணாசி நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பல விசாரணைகளுக்குப் பிறகு 1981 இல் இது ஷியாப் பிரிவினருக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 136 வருடங்கள் நிலுவையில் இருந்த வழக்கு.
இன்னொரு வழக்கு என்னவெனில்,
1951ல் கல்கத்தா கோர்ட்டில் போடப்பட்ட வழக்கு. பெர்காம்பூர் வங்கி திவாலான காரணத்தினால் போடப்பட்ட வழக்கு. அது கடந்த 2006 வரை இழுபறியாக நடந்தது. 57 வருடங்கள் நிலுவை.
இத்தகைய வழக்குகளால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்பதை யோசித்துத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது. இதில் குறிப்பிட்ட சதவிகிதம் விவாகரத்து வழக்குகள் இடம் பிடிக்கின்றன.
அடுத்து, மத்திய ரயில்வே அமைச்சர் பிகார் மாநில சமஷ்டிபூரி குண்டு வீசி படுகொலை வழக்கு
அனைத்தும் மாறிவரும் சூழலில் புத்தம் புது வழக்குகள் பிறந்து கொண்டு தான் இருக்கின்றன.