முதல் ஆணையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்!

Jul 23, 2024 - 21:29
 29
முதல் ஆணையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்!

கடலூர் நகராட்சியாக இருந்து வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் கடலூர் மாநகராட்சியில் முதல் பெண் மேயராக சுந்தரி ராஜா பதவி ஏற்றார்.

கடலூர் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டதால் கலெக்டர் பொறுப்பில் உள்ளவர்கள் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பலர் ஆணையாளராக நியமிக்கப்பட்டனர். அதன்படி கடந்த ஆணையராக காந்திராஜ் இருந்தார். நேற்று தமிழகம் முழுவதும் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி கடலூர் மாநகராட்சி ஆணையாளராக ஐ.ஏ.எஸ்.பொறுப்பில் உள்ள அனு என்பவரை தமிழக அரசு நியமித்தது. கடலூர் மாநகராட்சிக்கு முதல் முறையாக ஐ.ஏ.எஸ். பொறுப்பில் உள்ள அனு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக சிபி ஆதித்யா செந்தில்குமார் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று உள்ள நிலையில் அவரது மனைவி அனு கடலூர் மாநகராட்சியில் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.