வைரல் புகைப்படம் குறித்து நடிகர் Jackie Chan விளக்கம் !

ஜாக்கி சான் பகிர்ந்த உருக்கமான பதிவு !

Apr 8, 2024 - 20:15
Apr 8, 2024 - 20:19
 22
வைரல் புகைப்படம் குறித்து நடிகர் Jackie Chan விளக்கம் !

வைரல் புகைப்படம் குறித்து நடிகர் Jackie Chan விளக்கம் !

சாதாரண குடும்பத்தில் பிறந்து ஸ்டன்ட் மேனாக புரூஸ் லீ படங்களில் நடித்து வந்த ஜாக்கி சான் சினிமாவில் தனக்குத் தெரிந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை காமெடியான நடிப்புடன் கலந்து நடித்து பறந்து பறந்து சண்டைப் போட்டு ரிஸ்க்கான ஸ்டன்ட்டுகளில் டூப் போடாமல் நடித்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்தவர்.

குறிப்பாக இவருடைய தனித்துவமான சண்டைக் காட்சிகளுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் எப்பொழுதுமே உண்டு. தன்னுடைய நேர்த்தியான உடல் மொழியாலும், கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பாலும் கடந்த 62 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் ஜாக்கி சான் ஏப்ரல் 7ம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் நரை முடியுடன் பொதுவெளியில் ஜாக்கி சான் தோன்றிய புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ஜாக்கி சானின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து வந்துள்ளனர். தற்போது ஜாக்கி சான் அவருக்கு வந்த பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் , ஒரு உருக்கமான பதிவு ஒன்றையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

ஜாக்கி சான் பகிர்ந்த உருக்கமான பதிவு !

பல நண்பர்கள் எனக்கு நினைவூட்டினார்கள்,  "ஜாக்கி, இது உங்கள் 70வது பிறந்தநாள்!" என்று. ஒவ்வொரு முறையும் இந்த நம்பரைக் கேட்கும்போது, என் இதயம் ஒரு நொடி நின்றுவிடும் - எனக்கு ஏற்கெனவே 70 வயது ஆகி விட்டதா என்று. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட பிறகு என் நினைவுக்கு வரும் இரண்டாவது விஷயம், என் பெரிய சகோதரர் சம்மோ ஹங் ஒருமுறை கூறிய விஷயம். "வயது முதிர்வு என்பது ஒரு அதிர்ஷ்டமான விஷயம்." குறிப்பாக எங்களைப் போன்ற ஸ்டண்ட் நபர்களுக்கு, வயதாகிவிடுவது எவ்வளவு அதிர்ஷ்டம் என்று எங்களுக்கே தெரியாது. அதுமட்டுமின்றி , “என்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்து பலரும் எனது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து வருவதை பார்த்தேன்.

யாரும் வருந்த வேண்டாம். வயதான கதாபாத்திரத்தில் நான் நடித்து வரும் புதிய படத்துக்கான தோற்றம்தான் அது. புதிய விஷயங்களை முயற்சிப்பது எப்போதும் எனக்கு பிடிக்கும்" என ரசிகர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.