இதுவரை பதிவான வாக்குகள்! மோடியுடன் வாக்களித்த அமித்ஷா!

May 8, 2024 - 00:31
 9
இதுவரை பதிவான வாக்குகள்! மோடியுடன் வாக்களித்த அமித்ஷா!

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமித்ஷா ஆகியோர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்களித்தனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித்ஷா, குஜராத்தில் 2மணி நேரத்தில் 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நிலைத்தன்மை, பாதுகாப்பு, நாட்டின் வளம் மற்றும் இந்தியாவை வறுமையில் இருந்து விடுவிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், இந்த ஜனநாயக திருவிழாவில் அனைவரும் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டுமென கூறினார்.

அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 14.22 சதவீதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 6.64 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிற மாநிலங்களை பொறுத்தவரை, அஸ்ஸாம்-10.12%, சத்தீஸ்கர்-13.24%, பீகார்-10.03%, தாத்ரா, நாகர் ஹவேலி , டாமன் மற்றும் டையூ-10.13%

கோவா-12.35%

குஜராத் – 9.87%

கர்நாடகம் -9.87%

மத்திய பிரதேசம் – 14.22%

உத்திர பிரதேசம் – 11.63% என இதுவரை வாக்குகள் பதிவாகியுள்ளன.