டாப் 10 சொத்து மதிப்பு! வேட்பாளர்களின் மொத்த பட்டியல்!

May 14, 2024 - 23:15
 8
டாப் 10 சொத்து மதிப்பு! வேட்பாளர்களின் மொத்த பட்டியல்!

5ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு அடிப்படையில் டாப் 10ல் உள்ள வேட்பாளர்கள் குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மே. 20ம் தேதி நடைபெற உள்ள 5ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 49 தொகுதிகளில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் தாக்கல் செய்த தேர்தல் பிரமான பத்திரங்களை முழுவதுமாக அலசி ஒரு விரிவான அறிக்கையை atr அமைப்பு வெளியிட்டுருக்கிறது.

அதன்படி உத்திரப்பிரதேசம் ஜான்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அனுராக் சர்மா  212 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பணக்கார வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அடுத்தது, மகாராஷ்ட்டிராவின் பிவாண்டி தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் நிலேஷ் பகவான் சம்பரே 116 கோடி ரூ சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

வடக்கு மும்பை தொகுதியின் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் 110 கோடி ரூ சொத்து மதிப்புடன் 3ம் இடத்தில் உள்ளார்.

மகாராஷ்ட்ரிவானின் பிவாண்டி தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் பிரிவு வேட்பாளர் சுரேஷ் கோபினாத் மத்ரே 107 கோடி ரூ சொத்து மதிப்புடன் 4ம் இடத்தை பிடித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் சத்ரா தொகுதியின் காங்ரஸ் வேட்பாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி 70 கோடி ரூ சொத்து மதிப்புடன் 5ம் இடத்தில் உள்ளார்.

 ஒடிசாவின் போலங்கிர் தொகுதி பாஜக வேட்பாளர் சங்கீதா குமாரி சிங் தியோ 67 கோடி ரூ சொத்து மதிப்புடன் 6ம் இடத்தில் உள்ளார்.

வடமேற்கு மும்பை தொகுதி சிவசேனா வேட்பாளர் ரவீந்தர தத்தாராம் வைக்கர் 54 கோடி ரூ சொத்து மதிப்புடன் 7ம் இடத்தில் உள்ளார்.

மகாராஷ்ட்ரிவானின் பிவாண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கபில் மோரேஸ்வர் பாட்டில் 49.84 கோடி ரூ சொத்து மதிப்புடன் 8ம் இடத்தில் உள்ளார்.

உத்திரப்பிரதேசம் கெய்சங்கர்கஞ்ச் தொகுதி பாஜக வேட்பாளர் கரண் பூஷண் சிங் 49.56 கோடி ரூ சொத்து மதிப்புடன் 9ம் இடத்தில் இருக்கிறார்.

வடக்கு மும்பை தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் சஞ்சய் மோராக்கியா 48 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 10ம் இடத்தில் உள்ளார்.

மகாராஷ்டிராவின் பிவாண்டி தொகுதியில் , தேசியவாத காங்கிரஸ் , சரத்பவார் பிரிவு மற்றும் ஒரு சுயேட்சை பிரிவு ஆகிய மூவரும் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.