பரபரப்பை கிளப்பிய ஆதாரம்! ஆபாச வீடியோவின் சர்ச்சை காரணம்?

May 2, 2024 - 00:06
 7
பரபரப்பை கிளப்பிய ஆதாரம்! ஆபாச வீடியோவின் சர்ச்சை காரணம்?

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளன.

அதோடு அதை யார் வெளியிட்டது என்பது தான் பெரும் குழப்பத்தையும் கேள்வியையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தான் ஆபாச வீடியோ என்பது பிரஜ்வல்லின் முன்னாள் டிரைவர் கார்த்தி மூலம் தான் வெளியாகி உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கார்த்திக்கிடம் ஆபாச வீடியோ எப்படி சிக்கியது? பிரஜ்வல் ரேவண்ணா இடையே என்ன பிரச்சனை? எப்படி வீடியோ வெளியானது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா. ஜேடிஎஸ் எம்எல்ஏவாக உள்ள ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதி எம்பியாக மீண்டும் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதிக்கு கடந்த மாதம் 26ம் தேதி ஓட்டுப்பதிவும் நடைபெற்றது.

இதன் முன்னதாக தேர்தலுக்கு முன்பு ஹாசன் தொகுதி முழுவதும் பென் டிரைவ்கள் விநியோகம் செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் 2,976 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.
பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி சென்றுவிட்டதையடுத்து, தற்போது எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா நேற்று கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதற்கிடையே தான் வீடியோ எப்படி வெளியானது என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ரேவண்ணா குடும்பத்தில் டிரைவராக இருந்த கார்த்திக்தான் இந்த வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை பாஜக பிரமுகர் தேவராஜே கவுடாவிடம் வழங்கியதாகவும், ஆனால் இப்போது அந்த வீடியோவை நான் வெளியிடவில்லை எனவும் கார்த்திக் கூறுகிறார். இதன்மூலம் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியானதற்கு கார்த்திக் தான் காரணம் என்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் இப்போது வெளியிட்டது பாஜகவின் தேவராஜே கவுடாவா? இல்லையென்றால் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதால் அவர் காங்கிரஸ் கட்சியினரிடம் பென் ட்ரைவை வழங்கினாரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே தான் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கும், முன்னாள் டிரைவர் கார்த்திக்கிற்கும் இடையேயான உறவு, பிரச்சனை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கார்த்திக்கின் சொந்த ஊர் ஹோலோநரசிப்புரா. இந்த தொகுதியின் எம்எல்ஏ தான் ரேவண்ணா. இந்நிலையில் தான் ரேவண்ணாவின் குடும்பத்தில் கடந்த 15 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் ரேவண்ணாவின் குடும்பத்தில் உள்ள அனைவருடன் நெருக்கமாக பழகினார். பிரஜ்வல் ரேவண்ணாவின் செல்போன் உள்பட பிற எலக்ட்ரானிக் பொருட்கள் பலவற்றை கையாளும் வகையில் அவர் அதிகாரமிக்கவராக வலம் வந்தார். இதன் மூலம் தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோவை கார்த்திக் பார்த்து பென்ட்ரைவில்காப்பி' செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் கடந்த 2023ம் ஆண்டு தான் பிரஜ்வல் மற்றும் கார்த்திக் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதாவது கார்த்திக்கின் தாய் பெயரில் 13 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரஜ்வல் ரேவண்ணா அபகரித்துள்ளார். ஆனால் கார்த்திக் மற்றும் அவரது தாய் கடுமையாக எதிர்த்துள்ளனர். இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா கார்த்திக் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் கார்த்திக் , ரேவண்ணாவின் குடும்பத்தை விட்டு விலகியுள்ளார்.

அப்போது தான் இந்த வீடியோக்களும் வெளியானது. அதன் பிறகு பிரஜ்வல் ரேவண்ணா தன்னையும், தனது மனைவியையும் கடத்தியதாக கார்த்திக் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகும் மீண்டும், இந்த வீடியோ விவகாரம் தலையெடுக்க கிளம்பியுள்ளது.

அந்த வகையில் கார்த்திக் உரிய ஆதாரங்களை வைத்து தேவராஜே கவுடா மூலம் ப்ரஜ்வலை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனைத்தொடர்ந்து, மேலும் மேலும் இந்த விவகாரம் இவர்கள் மூவரிடம் பெரும் சர்ச்சையாக கிளம்பிக்கொண்டிருந்தது. இவர்கள் மூவரும் தங்களுக்குள் குற்றசாட்டை சுமத்தி வந்தனர். இந்ந்லையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக மாஜி டிரைவர் கார்த்திக் அளித்த பேட்டியில், நான் ஆபாச வீடியோ பென்ட்ரைவை தேவராஜே கவுடாவிடம் மட்டுமே வழங்கி உள்ளதாகவும், தான் வீடியோ பரப்பவில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் தேவராஜே கவுடா, கார்த்திக் தான் பென்ட்ரைவை காங்கிரஸிடம் வழங்கி வெளியிட்டு இருக்கலாம் என கூறுகிறார். இவர்கள் கார்த்திக், தேவராஜே கவுடா இடையே தற்போது இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் வீடியோவை பரப்பியது தொடர்பாக இருவரிடமும் எஸ்ஐடி விசாரணை நடத்தப்பட உள்ளது.