விஷால்-உதயநிதி ஸ்டாலின் பிரச்சனை!

நடிகர் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் , உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு நிறுவனத்துடன் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டதாக கூறியிருந்தார்.

Apr 23, 2024 - 20:51
Apr 23, 2024 - 20:55
 5
விஷால்-உதயநிதி ஸ்டாலின் பிரச்சனை!

விஷால்-உதயநிதி ஸ்டாலின் பிரச்சனை!

நடிகர் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் , உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு நிறுவனத்துடன் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டதாக கூறியிருந்தார்.

படத்தை தள்ளி வைக்க சொன்ன உதயநிதியின் தயாரிப்பு நிறுவனம்!

அந்த பேட்டியில் பேசும்போது, அவருடைய எதிரி மற்றும் மார்க் ஆண்டனி படத்தில் வெளியீட்டின் போது உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு  நிறுவனத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட நபர் தயாரிப்பாளரிடம்  மார்க் ஆண்டனி படத்தின் வெளியீட்டை  தள்ளி வைக்குமாறு சொல்லி இருக்கிறார். இதனால் விஷால் கோபம் அடைந்ததாகவும் கூறியிருந்தார். இதே போல் தான் அவருடைய எதிரி படத்திற்கும் அந்த நிறுவனத்தில் இருந்து பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார். மேலும் , இந்த சம்பவம் குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியுமா என்று தெரியவில்லை , அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட நபருடன் எனக்கு பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. தங்கள் படத்தை தள்ளிப் போடுங்கள் என்று கேட்க  யாருக்கும் உரிமை இல்லை. சினிமா யாருக்கும் சொந்தமில்லை.

 

வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர் - விஷால்

'தமிழ் சினிமா என் கையில்' என்று சொன்ன எவரும் வளரவில்லை. நான் என் தயாரிப்பாளருக்காக பேசுகிறேன், அவர் வட்டிக்கு பணம் வாங்கி இந்த படத்தை எடுத்திருக்கிறார். தங்கள் படத்திற்காக நாங்கள் அனைவரும் ரத்தமும் வியர்வையும் சிந்தினோம், நீங்கள் ஏசி அறைக்குள் அமர்ந்து படத்தை பிறகு வெளியிடுங்கள் என்று கூறுகிறீர்கள். உனக்கு யார் உரிமை கொடுத்தது? என்று நான் அவரிடம் கேட்டேன், என தெரிவித்துள்ளார். மேலும் மார்க்க ஆண்டனி படத்தை தயாரிப்பாளர் நினைத்த தேதி அன்று வெளியிட்டு ஹிட் அடித்தோம். இது எனது தயாரிப்பாளருக்கு லாபத்தையும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நல்ல வாழ்க்கையையும், எனக்கு வெற்றியையும் கொடுத்தது. நான் அமைதியாக இருந்திருந்தால், இது நடந்திருக்காது.

ரத்தினம் படத்திற்கு வரப்போகும் பிரச்சனை!

எனது நடிப்பில் வெளிவரவிருக்கும் ரத்தினம் படத்துக்கும் பிரச்சினை வரும் என்று நம்புகிறேன். இதை வெளியே சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை.தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் திரையுலகம் வேறு லெவலில் இருக்கும். வணிகத்திற்கும் நட்புக்கும் இடையே ஒரு கோட்டை வரைய வேண்டும். ரத்தினம் படத்திற்கு என்ன பிரச்சனை வந்தாலும் அதை நான் எதிர்கொள்வேன் எனவே விஷால் தெரிவித்துள்ளார்.