தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சை!

Mar 30, 2024 - 00:36
 7
தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சை!

அனைத்து கட்சி பிரச்சாரங்களும் தீயாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இதற்கான விதிமுறைகளும், முன்னதாகவே அறிவிக்கப்பட்டதை போல், பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதோடு, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாஜக நிர்வாகி சரவணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஜாபர்கான்பேட்டையில் அனுமதியின்றி வேனில் பேண்டு வாத்திய குழுவுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பறக்கும் படை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் பாஜக சைதாப்பேட்டை பகுதி அமைப்பாளர் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.