cVIGIL செயலி மூலம் நடவடிக்கை!
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான விதிமுறைகளும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரச்சாரத்தில் விதிமீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, தேர்தல் தொடர்பான சோதனையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில்,
தமிழகத்தில் மார்ச் 31 வரை ரூ.109 கோடியே 76 லட்சம் மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சி-விஜில் செயலி மூலம் விதிமீறல் புகார்களை தெரிவிக்கலாம் என பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில், cVIGIL செயலி மூலம் 1,822 புகார்கள் பெறப்பட்டு அதில், 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும், சி-விஜில் செயலி மக்களிடம் சிறந்த கருவியாக மாறியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவதை தாங்கள் அறியநேர்ந்தால், அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, உரிய ஆதாரத்துடன் செயலியில் பதிவு செய்து, புகார் தெரிவித்தால் 100 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.