போராட்டத்தை கையிலெடுக்கும் காங்கிரஸ்!

Mar 30, 2024 - 01:32
 4
போராட்டத்தை கையிலெடுக்கும் காங்கிரஸ்!

ஒன்றிய பாஜகவை கண்டித்து நாளை நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

அதாவது, காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1823 கோடி வரி நிலுவை உள்ளதாக வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியை முடக்க சதி நடக்கிறது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வருமான வரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

2017-2018 முதல் 2020-2021 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1,823 கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த நோட்டீஸ் வரி தீவிரவாதம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.