நீட் தேர்வுக்கு தயாரான 24 லட்சம் மாணவர்கள்!

May 4, 2024 - 17:59
 5
நீட் தேர்வுக்கு தயாரான 24 லட்சம் மாணவர்கள்!

2024-25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஞாயிற்று கிழமை நாளை தொடங்குகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நீட் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்த தேர்வானது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை www.nta.ac.in என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய முகமை தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் மொத்தமாக 24 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமே ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது.