உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிர்ப்தி! அமலாக்கத்துறை நடவடிக்கை தீவிரம்!

May 4, 2024 - 01:14
 9
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிர்ப்தி! அமலாக்கத்துறை நடவடிக்கை தீவிரம்!

ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்த போது ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 8.5 ஏக்கர் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டு எழுந்தது.

அதன் அடிப்படையில், கடந்த ஜனவரி 31ம் தேதி அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனை கைது செய்தது.

இதனையடுத்து, இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது கடந்த பிப்ரவரியில் இறுதி விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை ஒத்தி வைத்தது.

உயர்நீதிமன்றம் இதுவரை இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்காமல் இருந்தது. இதனால் ஹேமந்த் சோரன் தரப்பில் இடைக்கால ஜாமீன் வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலின் அடிப்படையில் அவசர விசாரணை நடத்த வேண்டும் என சோரன் கோரினார்.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் என கோரி மனுவைத் தள்ளுபடி செய்தது.