எக்ஸ் பயனர்களுக்கு இலவச சந்தா! எப்படி பயன்படுத்த வேண்டும்?

Mar 29, 2024 - 00:13
 8
எக்ஸ் பயனர்களுக்கு இலவச சந்தா! எப்படி பயன்படுத்த வேண்டும்?

எலான் மஸ்க் டுவிட்டர் பக்கத்தில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்தவர். இந்த மாற்றங்களில் சமூக வலைதளத்தை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்ததும் ஒன்று. பெயர் மாற்றத்தோடு கட்டண முறையில் பயனர்களுக்கு ப்ரத்யேக அம்சங்களை வழங்கும் சந்தா முறையை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் கொண்டு வந்தார்.

இதன் பிறகு, இதே போன்ற திட்டத்தை மற்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற துவங்கின. இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், எக்ஸ் தளத்தில் 2500 க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்டிருக்கும் அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படும்.

மேலும், 5000க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்ட அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் பிளஸ் சந்தா இலவசமாக வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த இலவச சந்தாவை பெறுவதற்கு எலான் மஸ்க்கின் புதிய அறிவிப்பின் படி எக்ஸ் தளத்தில் 2500 ஃபாளோவர்களை வைத்திருப்போருக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படாது. மாறாக 2500 ஃபாளோவர்கள் பிளஸ் சந்தாக்களில் எதையேனும் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

இதே போன்று பிரீமியம் பிளஸ் சந்தாவை இலவசமாக பெற, குறிப்பிட்ட எக்ஸ் அக்கவுண்ட்-ஐ குறைந்தபட்சம் 5000 ஃபாளோவர்கள் இந்த சந்தாக்களில் எதையேனும் வாங்கிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.