இஸ்ரேலில் ஏற்பட்ட பரபரப்பு! போரைத் தொடர திட்டவட்டம்!

May 6, 2024 - 16:34
 0  0
இஸ்ரேலில் ஏற்பட்ட பரபரப்பு! போரைத் தொடர திட்டவட்டம்!

காசாவின் மிக முக்கிய நகரான ரஃபா நகரத்தை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியுள்ளதால் திடீரென பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக காசாவில் உள்ள ஹமாஸ் படையைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் போர் பல மாதங்களாகத் தொடர்கிறது.

காசா போரில் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தம் அதிகரித்தாலும் கூட ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போரைத் தொடர்வதில் இஸ்ரேல் திட்டவட்டமாக இருக்கிறது.


சில காலமாக அங்குக் கொஞ்சம் அமைதி நிலவி வந்த நிலையில், மீண்டும் இப்போது மோசமான தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது எகிப்து- இஸ்ரேல்- காசா எல்லையில் அமைந்துள்ள ஹமாஸ் கெரெம் ஷாலோம் எல்லைப் பகுதியில் சமீபத்தில் ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது. ரஃபா நகரில் இருந்து சுமார் 10 ஏவுகணைகள் கெரெம் ஷாலோம் எல்லையை நோக்கி ஏவப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கிறது. இந்தத் தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த பல வீரர்கள் காயமடைந்துள்ளனர். குறைந்தது 10 பேர் மருத்துவமனையில் தீவிரமாகச் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து எல்லை கிராஸிங் மூடப்பட்டுள்ளது. இந்த நிலை சீராகும் வரை அந்த கிராஸிங் மூடப்பட்டே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது.

இதற்கிடையே இந்தத் தாக்குதல் நடந்து கொஞ்ச நேரத்திலேயே தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தை இஸ்ரேல் தாக்கியது.. இதில் 3 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இரு தரப்பிற்கும் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. தீவிர ஆலோசனை நடந்த போதிலும் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow