இறங்கி வந்த ஓ.பி.எஸ்…எனக்கு எந்த பதவியும் வேண்டாம்!

அதிமுக இணைந்தால் மட்டும் போதும், தனக்கு எந்த பதவியும் தேவையில்லையென முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை, எழும்பூரில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உரையாற்றினார். அப்போது, பரிசுத்தமாக அரசை நடத்தினால் எந்த தேர்தலிலும் வெற்றி பெறலாம் என தான் துணை முதலமைச்சராக இருந்த போது எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாகவும், அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லையெனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக மீண்டும் இணையக் கூடாது என நினைக்கும் ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பல தேர்தல்களில் வெற்றியைத் தந்த இரட்டையிலை சின்னத்தை எதிர்த்து தேர்தலில் நின்றது தனக்கு வருத்தமளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, தனக்கு எந்த பதவியும் வேண்டாமெனக் கூறிய ஓபிஎஸ், அதிமுக ஒன்றிணைந்தால் மட்டும் போதும் எனத் தெரிவித்துள்ளார்.