உயரும் பலி எண்ணிக்கை! மோடி இரங்கல்!
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலி எண்ணிக்கையானது உயர வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது. மேலும், மீட்பு பணி தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வயநாட்டில் 2 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி உள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்த நிலையில் உயிரோடும் சிலரை மீட்டு வருகின்றனர். மேலும், இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார், அதில், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்ததாகவும், அதற்காக தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார். அதன் படி இராணுவ வீரர்கள் கேரள அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.