வயநாடு நிலச்சரிவு என்ன காரணம்? Wayanad Landslide | Kerala

Jul 30, 2024 - 19:28
 30
வயநாடு நிலச்சரிவு என்ன காரணம்? Wayanad Landslide | Kerala

Wayanad Landslide |

 

தொடர் மழை காரணமாக  கேரளாவின் வயநாடு பகுதியில் முண்டக்கை என்ற இடத்தில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் 2வது நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இதுவரை 41 பேர் உயிரிழந்த நிலையில், மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

மீட்பு பணிகள் தீவிரம்!

ராணுவ வீரர்கள் 225 பேர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்த களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த இடத்தை சென்றடைவதே மீட்புப் படையினருக்குக் கடினமாக இருக்கும் நிலையில், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வயநாட்டில் நிலவும் மோசமான வானிலையால், ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிக்கு வர முடியாத சூழ்நிலை நிலவி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணம்!

வயநாடு உட்பட கேரளாவின் பல வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் மழையினால் சூழப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையினால் கடும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே பல மணி நேரம் கனமழை கொட்டிய நிலையில், அதுவே நிலச்சரிவை ஏற்படுத்தி உள்ளது.