விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி ; 1 மணி நேரத்தை கடந்த விசாரணை!

பரப்புரையை நிறுத்தாதது ஏன்?

Jan 12, 2026 - 13:42
 5
விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி ; 1 மணி நேரத்தை கடந்த விசாரணை!

விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி ; 1 மணி நேரத்தை கடந்த விசாரணை!

பெருங்கூட்டத்திற்கு மத்தியிலும் பரப்புரையை நிறுத்தாதது ஏன்? என சிபிஐ கேள்வி எழுப்பியுள்ளது.

4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு கேள்விகள் கேட்டு வருகிறது.

கரூரில் நெரிசல் நிகழ்ந்தது எப்படி? பரப்புரைக்கு தாமதமாக சென்றதற்கு காரணம் என்ன? டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய்யிடன் 1 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொழில்நுட்ப ரீதியாகவும், குற்ற பின்னணி அடிப்படையிலும் 2 பிரிவுகளாக விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது தவெக தலைவர் விஜய்யிடம் எழுத்துப்பூர்வமான விசாரணை நடைபெற்று வருகிறது.

எத்தனை பேர் வருவார்கள் என நீங்கள் எதிர்பார்த்தீர்கள் எத்தனை பேர் பிரச்சாரத்திற்கு வருவார்கள் என நினைத்தீர்கள்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து உடனடியாக விஜய் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது அது உண்மை தானா? என தொடர்ந்து கேள்விகளை முன்வைத்து வருகின்றன.