நிருபரை கதறவிட்ட பிகாா் சிறுவனின் "மனிதநேயம் " | India Pakistan War

நிருபரை கதறவிட்ட பிகாா் சிறுவனின் "மனிதநேயம் "
நிருபரை கதரவிட்டு உலகம் முழுவதும் ஒரே நாளில் பிரபலமான பிகாா் சிறுவன் ... பாகிஸ்தானை ஆதரிக்கிறீர்களா என்று கேட்ட நிருபரை முகமது கைஃப் என்ற அந்த சிறுவன் ஆச்சரியப்படும் விதமாக ஆழமான பதிலைக் கொடுத்தார்.
பஹல்காம் படுகொலைக்கு பிறகு பிரதமா் மோடி அவா்கள், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் கூண்டோடு வேட்டையாட படுவார்கள் என்று அறிவித்தாா். இதனை தொடர்ந்து மே 7 அன்று இரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்தியா தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தானை நிலைகுலைய வைத்துள்ள நிலையில் சம்பவத்திற்கு பிறகு பதில் தாக்குதலை ஆரம்பித்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு தொடர்ந்து தக்க பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம்.
இது ஒரு புறம் இருக்க பகல்ஹாம் படுகொலைக்கு சுமார் ஒரு மாதத்திற்கு (ஜனவரி 6ஆம் தேதி ) முன்னதாக பீகார் மாநிலத்தில் ஒரு செய்தியாளர் ஒரு சிறுவனிடம் ஒரு பேட்டி எடுத்துள்ளார் அந்த பேட்டியில் செய்தியாளர் இந்தியா ஜிந்தாபாத் தானே என்ற கேள்வி கேட்க ஆமா இந்தியா ஜிந்தாபாத் தான் என்ற பதில் கூறியுள்ளான்.
ஜிந்தாபாத் என்றால் "வாழ்க!" அல்லது "நீண்ட காலம் வாழ்க!" என்று பொருள் .பத்திரிக்கையாளர் மீண்டும் அப்போ பாகிஸ்தானுக்கு என்ன என்று கேட்டார் அதற்கு அந்த சிறுவன் கொஞ்சம் கூட யோசிக்காமல் பாகிஸ்தானுக்கும் ஜிந்தாபாத் தான் என்று பதில் அளித்தான். இந்த பதிலை கேட்ட அந்த பத்திரிக்கையாளர் அந்த சிறுவனை பார்த்து நீ இப்படி பதில் சொல்றியே உனக்கு வெட்கமாக இல்லையா, என்று கேட்டுள்ளார். அதற்க்கு அந்த சிறுவன் நான் எதுக்கு வெட்கப்படனும்னு என்று சொன்னவுடன், உடனே பத்திரிக்கையாளர் அந்த சிறுவனை பார்த்து பாகிஸ்தான் அழியக்கூடாதா என்று கேட்டுள்ளாா். அதற்கு அந்த சிறுவன் அழியக்கூடாது என்று பதில் கூறுகிறான் . மீண்டும் அந்த பத்திரிக்கையாளர் இந்தியாவிற்கு ஜிந்தாபாத் பாகிஸ்தானுக்கு என்ன என்று கேள்வி கேட்க அதற்கு சிறுவன் பாகிஸ்தானுக்கும் ஜிந்தாபாத் தான் . எல்லோரும் அவங்க, அவங்க இடத்துல வாழனும், நீங்களும் உங்கள் இடத்தில் வாழுங்க, அப்படின்னு சொல்லி தைரியமாக பேசி இருக்கிறான் அந்த சிறுவன்.
இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்காத அந்த பத்திரிகையாளர், சிறுவனை பார்த்து உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் என்னுடைய பெயர் கைஃப் என்று கூறியுள்ளான் . உடனே அந்த பத்திரிக்கையாளர் உன்னுடைய முழு பெயர் என்ன என்று திரும்பவும் கேட்கிறார். அதற்க்கு சிறுவன் தன்னுடைய முழு பெயர் முகமது கைஃப் என்று கூறிவுள்ளான். இதற்க்கு அடுத்து பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத் சொல்லுற, பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற , உனக்கு கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா என்று பத்திரிக்கையாளர் சிறுவனை பார்த்து திரும்பத் திரும்ப கேட்கிறார். நீ ஏன் பாகிஸ்தான் அழியக்கூடாது என்று நினைக்கிறாய் என்று மீண்டும் அந்த சிறுவனை பார்த்து கேட்கிறார் பத்திரிகையாளர், அதற்கு அந்த சிறுவன் பத்திரிகையாளரை பார்த்து இதெல்லாம் ஒரு செய்தி என்று நீங்கள் போடுறீங்களே இது உங்களுக்கு வெக்கமா, அசிங்கமா இல்லையா.
ஹிந்து முஸ்லிம் என்று சொல்லி வெறுப்பை கக்குற விதமா எல்லா இடத்திலும் இந்த செய்தியை பரப்பி விடுறீங்களே இது உங்களுக்கு அசிங்கமா இல்லையா என்று பகிரங்கமா ஆவேசமா அந்தப் பத்திரிக்கையாளர் முகத்தில் அறைகிற மாதிரி அந்த சிறுவன் பத்திரிக்கையாளரை பார்த்து கேள்வி கேட்டுள்ளார்.
இப்படி அந்த சிறுவன் பேசியவுடன் பக்கத்தில் இருந்தவர்கள் அவருடைய துணிச்சலான பதிலை கேட்டதும் கைத்தட்டி ஆரவாரம் செய்து அந்த சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எல்லா இடத்திலும் மனிதர்கள் வாழ்கிறார்கள் அங்கேயும் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இருக்கிறார்கள், எல்லோருமே மனிதர்கள் தான் எதற்காக எல்லோரையும் கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்கள், அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது என்று சிறுவன் முகமது கைஃப் கூறிவுள்ளான்.
எதற்கு ஒருத்தர அழிக்கணும்... அப்படி சொன்னா உடனேயே நீ பாகிஸ்தான சப்போர்ட் பண்றியா அப்படின்னு திரும்பவும் பத்திரிக்கையாளர் சிறுவன் முகமது கைஃப்பை பார்த்து கேட்கிறார். உடனே அந்த சிறுவன் நான் சப்போர்ட் பண்ணுகிறேன் ஏனென்றால் அங்கேயும் மனிதர்கள் வாழ்கிறார்கள். அப்போ நீ இந்தியன் இல்லையா என்று கேட்ட, பத்திரிக்கையாளரை பார்த்த அந்த சிறுவன் ஆம் நான் இந்தியன் தான் நீங்க ஒரு நாட்டை அழிக்கணும்னு சொல்றீங்க , ஆனா எல்லா இடத்திலும் மக்கள் வாழ்றாங்க என்று அந்த சிறுவன் மிக தைரியமாக பேசியிருந்தான் . அந்த சிறுவனுடைய பதிலைக் கேட்டு அந்த பத்திரிக்கையாளர் தன்னுடைய தோல்வியை ஒத்துக்க முடியாம ஒரு சின்ன விஷயத்தை தெரிஞ்சுக்கணும் அப்படின்னு சொல்லி அந்த சிறுவன் கிட்ட இதெல்லாம் உனக்கு யார் சொல்லி தந்தா என்று கேட்கும்போது அதற்கு அந்த சிறுவன் அண்ணன் என்கிட்ட மூளை இருக்குன்னு சிரித்துக்கொண்டே அந்த பகுதியை விட்டு அந்த சிறுவன் சென்று விடுகிறான். எனவே வெறுப்பை கக்கும் விதமாகவும் ஒரு நாட்டை அழிக்கிற விதமாகவும் தீவிரவாதத்தை தூண்டும் விதமாகவும் பேசிய அந்த பத்திரிக்கையாளருக்கு முகமது கைஃப் என்ற அந்த சிறுவன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்த காணொளி மக்கள் மத்தியில் கவனம் பெற ஆரம்பித்துள்ளது.இந்த சிறுவனுடைய பதிலை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்