சீறிப்பாய்ந்த காளைகள்! புதுக்கோட்டை

Jul 12, 2024 - 00:46
 7
சீறிப்பாய்ந்த காளைகள்! புதுக்கோட்டை

சீறிப்பாய்ந்த காளைகள்! புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள புதுநிலைப்பட்டி கண்ணுடையார்,குருந்துடையார் அம்மன் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி,குதிரை வண்டி  பந்தயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த போட்டி சிறிய மாடு,நடுமாடு,பெரியமாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை,தேனி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 38ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டியில் 21ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 10 சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 7 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிக்கு போக வர  12 கிலோ மீட்டர் தூரமும்,சிறிய மாட்டிற்கு போக வர10 கி.மீ தூரமும்,சிறிய மாட்டு வண்டிக்கு போக வர 9 கிலோமீட்டர் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டியான நடைபெற்றது.அதேபோல் குதிரை வண்டி பந்தயத்தில் 9 குதிரை வண்டிகள் பந்தயத்தில் பங்குபெற்றன.
 புதுநிலைப்பட்டியில் தொடங்கிய போட்டி தொடந்து காரைக்குடி-அறந்தாங்கி நெடுஞ்சாலையில் மாட்டு வண்டி போட்டி  நடைபெற்றது. நான்கு கால் பாய்ச்சலில் போட்டி போட்டுக் கொண்டு துள்ளிக்குதித்தும்  ஒன்றையொன்று‌ முந்தி சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.போட்டியைக்காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள்   சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டி ஜோடிகளையும் அதனை ஓட்டி வந்த சாரதிகளையும் கைத்தட்டி ஆரவாரத்துடன்  கண்டு ரசித்தனர்.