அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கைது!
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட அதிமுகவினர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க கோரி இன்று கடையடைப்பு நடத்த போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அதன் படி இன்று அதிமுகவினர் சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைந் நடத்த முற்பட்ட போதும் அதனை மறுத்த கூச்சல் போட்டதால், அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். அங்கிருந்து கலைய மறுத்தவர்களை போலீசார் தூக்கி சென்று வாகனங்களில் ஏற்றியுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உட்பட முற்றுகையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் வைத்துள்ளனர். மேலும், அமைச்சரிடம் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.