செந்தில்பாலாஜிக்கு ED செக்!

Aug 13, 2024 - 00:31
Sep 9, 2024 - 19:34
 8
செந்தில்பாலாஜிக்கு ED செக்!

ஊழல் வழக்கில் விசாரணை முடியாமல், அமலாக்கத்துறை வழக்கை விசாரித்து தண்டிக்க சட்டம் அனுமதிக்கிறதா என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊழல் வழக்கு விசாரணையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டுவிட்டால் பண மோசடி வழக்கு என்னவாகும் எனவும், செந்தில்பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளன என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

முதல் வழக்கில் 21 சாட்சிகளும், 2வது வழக்கில் 100 சாட்சிகளும், 3வது வழக்கில் 200 சாட்சிகளும் உள்ளது என அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.

இதனிடையே செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை எப்போது நிறைவடையும் என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு,  

வாய்தா கேட்காவிட்டால் 3 மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும், லஞ்ச ஊழல் வழக்கில் விசாரணை தாமதமாவதை சுட்டிக்காட்டி பண மோசடி வழக்கில் செந்தில்பாலாஜி ஜாமீன் கோர முடியாது எனவும் அமலாக்கத்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

அதோடு, இந்த வழக்கு எப்போது முடியும் என நீதிமன்ற கேள்விக்கு செந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச ஊழல் விசாரணையை தமிழ்நாடு அரசு தான் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது எனவும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது.