ஸ்ரீவில்லிபுத்தூர் பெயர் காரணம்! Srivilliputhur Name History
ஸ்ரீவில்லிபுத்தூர் பெயர் காரணம்! Srivilliputhur Name History
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரை வாராக சேஸ்திரம் என்று சொல்வார்கள். அதன் அருகே உள்ள ஒரு பகுதியை ராணி மல்லி என்பவர் ஆட்சி செய்து வந்தார். இந்த அரசிக்கு வில்லி, கண்டன் என்று இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள் இவர்கள் இருவரும் காட்டிற்கு வேட்டையாட சென்று இருக்கிறார்கள். அப்பொழுது கண்டனை ஒரு புலி கொன்றுவிட்டது. இந்த உண்மை தெரியாத வில்லி, அவருடைய தம்பியை தேடி காடு முழுவதும் அலைந்துவிட்டு ஒரு மரத்தடியில் உறங்கி இருக்கிறார். அப்பொழுது அவருடைய கனவில் பெருமாள் தோன்றி அவருடைய தம்பி கண்டனுக்கு நடந்ததை கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, காலநேமி என்ற அசுரனை வதம் செய்வதற்காக இந்த பகுதியில் எழுந்தருள போவதாகவும், ஆலமரத்தடியில் "வடபத்ரசாயி" என்ற திரு நாமத்தில் அருள்பாளிக்க போவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இதற்காக அந்த காட்டுப்பகுதியை நகரமாக மாற்றி அதில் அவருக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபட வேண்டும் என்று பெருமாள் கூறியதை அடுத்து வில்லி அந்த காட்டை திருத்தி நகரமாக உருவாக்கினார். இதனால்தான் இந்த ஊருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் என பெயர் வந்தது!