சூர்யா 44 படத்தின் மீது புகார்!

Aug 16, 2024 - 23:29
Sep 9, 2024 - 19:27
 8
சூர்யா 44 படத்தின் மீது புகார்!

கார்த்திக் சுப்புராஜ் சூர்யா கூட்டணியில் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பானது நீலகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பில் வெளிநாட்டவர்கள் அனுமதியின்றி பணி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சுற்றுலா விசாவில் இந்தியா வந்த 100க்கும் மேற்பட்ட ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களை அனுமதியின்றி பங்கேற்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது. குடியேற்ற விதிகளின் படி வணிக அல்லது வேலை விசாவில் இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் மட்டுமே ஊதிய வேலைகளில் ஈடுபடலாம்.

சுற்றுலா விசாவில் வந்ததால் ஊதியம் பெற அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த நிலையில் அனுமதியின்றி சூர்யா படப்பிடிப்பில் பங்கேற்ற வெளிநாட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குடியேற்ற விதி குறித்து ஏஜெண்டுக்கும் தெரியாது என்பதால் இதில் தவறு நடந்துள்ளதாக படப்பிடிப்பின் குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.