ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்! Kakanmath Temple

Aug 17, 2024 - 00:55
 34
ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்! Kakanmath Temple

ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்! Kakanmath Mystery Sivan Temple

வட இந்தியாவில் உள்ள ஒரு சிவன் கோவிலை பேய்கள் ஒரே இரவில் கட்டியதாக காலம் காலமாக சொல்லி வருகின்றனர். இந்த கோவில் உத்திரபிரதேசம் மாநிலம் மீரட்டில் அமைந்துள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், சிம்போலி என்ற ஊரில், தடியன்னா என்ற ஒரு கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலை தான், பேய்கள் கட்டிய கோவில் என்று கூறி வருகின்றனர்.  அதன் காரணம் என்னவென்றால், செங்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் செங்கல் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருக்க எந்தவிதமான சிமெண்ட், சுண்ணாம்பும் பூசவில்லையாம். பிறகு எப்படி அந்த கோவிலை கட்டியிருப்பார்கள் என்பதை ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் தான்! அதுமட்டுமில்லாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோவிலை ஒரே இரவில் கட்டி முடித்துள்ளார்கள். அதாவது, ஒரு நாள் இரவு நேரத்தில் இந்த கிராமத்தில் வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு பயந்த ஊர் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லையாம். பின் இரவு முழுவதும் கேட்ட அந்த பயங்கர சத்தம் காலை சூரிய உதயம் வந்தவுடன் நின்றுவிட்டது. பிறகு அந்த ஊர் மக்கள் சத்தம் கேட்ட இடத்தை நோக்கி சென்றுள்ளனர். அங்கு திடீரென்று பாதி கட்டப்பட்ட ஒரு கோவிலில் இருந்துள்ளது. அதை கண்டதும் ஊர் மக்கள் , ஒரே இரவில் யாரால் இப்படிப்பட்ட கோவிலை கட்ட முடியும்  என்று ஆச்சரியப்பட்டு பேய்கள் தான் இந்த கோவிலை கட்டியதாகவும் , பின் விடிந்ததும் அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டதாகவும் கூறிவிட்டு மீதி கட்டிட வேலைகளை அவர்களே செய்து இருக்கிறார்கள். மேலும், 115 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் சக்தி வாய்ந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே அதிக சக்தி வாய்ந்த சிவன் கோவிலில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலில் இருக்கக்கூடிய இன்னொரு விசேஷம் என்னவென்றால், இது சிவன் கோவிலாக இருந்தாலும் கூட நான்கு மதங்களின் சின்னங்களும் இந்த கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மழை, புயல், வெள்ளம் என எவ்வளவு இயற்கை பேரிடர் வந்தாலும் இதுவரையிலும் அந்த பேய்கள் கட்டிய கோவிலுக்கு எதுவும் ஆனதில்லை என்றும், அந்த கிராம மக்கள் கட்டிய கோபுரம் மற்றும் ஒருமுறை சிதைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் பேய்கள் கட்டிய கோவிலாக இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக அந்த கிராம மக்களை இந்த சிவன் கோவில் தான் பாதுகாத்து வருவதாக ஊர் மக்கள் நம்புகின்றனர்.