4 விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்!

Aug 17, 2024 - 20:00
Sep 9, 2024 - 19:18
 9
4 விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்!

மத்திய அரசின் 70வது தேசிய திரைப்பட விருதுகளை, தேர்வுக்குழு தலைவர் ராகுல் ரவைல் அறிவித்தார். கடந்த 2022ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதில், மலையாளத்தில் வெளியான ஆட்டம் ஹிந்தியில் வெளியான குல்மொகர், மலையாள படமாக சவுதி வெள்ளாக்கா, தெலுங்கு படமாக கார்த்திகேயா – 2,  கன்னட படமாக கே.ஜி.எப் – 2 உள்ளிட்டவை சிறந்த திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த விருது பட்டியலில் பாலிவுட்டில் இருந்து ஒரு படம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த வரிசையில், ஊஞ்சாய் திரைப்படத்தை இயக்கிய சூரஜ் ஆர். பர்ஜாத்யா சிறந்த இயக்குனராகவும்,  அதே படத்தில் நடித்த 65 வயதான நீனா குப்தா சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றுள்ளார்.

அதே போல், கன்னடத்தில் வெளியான காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த பொழுது போக்குக்கான விருதையும் காந்தாரா வென்றுள்ளது.

அடுத்து,  திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனன் சிறந்த நடிகையாகயும், அதே படத்தில் இடம்பெற்ற பாடலில் நடன இயக்குனராக பணியாற்றிய சதீஷ் மற்றும் ஜானி சிறந்த நடன இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மணிரத்தனத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டுமே 4 பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது.